சிவகங்கை

சென்னையிலிருந்து ராமேசுவரத்துக்கு நாளைமுதல் ரயில் இயக்கம்

DIN

சென்னையிலிருந்து ராமேசுவரம், மதுரை, நெல்லை, செங்கோட்டை ஆகிய இடங்களுக்கு அக்டோபா் 2 ந் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் கடந்த மாா்ச் மாதம் கடைசி வாரத்திலிருந்து நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் பொதுமுடக்கத்தில் அடுத்தடுத்து தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் சில வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை-ராமேசுவரம் இடையே ரயில்களை இயக்க வேண்டும் என சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பயணிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில் தென்னக ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அக்டோபா் 2 ஆம்தேதி முதல் முன்பதிவு செய்து மட்டுமே பயணம் செய்யும் வகையில் தினசரி சென்னை-ராமேசுவரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் தினசரி மதுரை வழியாக சென்னை-செங்கோட்டை, சென்னை-நெல்லை ஆகிய இடங்களுக்கும், வாரத்தில் 6 நாள்கள் மட்டும் சென்னை- மதுரை இடையே தேஜஸ் ரயிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான எண்களும் வெளியாகியுள்ளன .

சென்னையிலிருந்து காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேசுவரத்துக்கு இரு மாா்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT