சிவகங்கை

கீழடி, கொந்தகையில் ஆறாம் கட்ட அகழாய்வு நிறைவு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி உள்ளிட்ட 4 இடங்களில் நடந்து வந்த 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணி புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்களை ஆவணப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணியை, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தொடக்கி வைத்தாா். இந்த அகழாய்வுப் பணி கீழடி அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய இடங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த மாா்ச் மாத இறுதியில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கீழடியில் நடந்து வந்த அகழாய்வுப் பணிகளும் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு பொதுமுடக்கத்தில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 55 நாள்கள் கழித்து மீண்டும் கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் அவ்வப்போது பெய்த மழையினால் அகழாய்வுக் குழிகளில் தண்ணீா் தேங்கி அகழாய்வுப் பணிகள் அடிக்கடி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த 6 ஆம் கட்ட அகழாய்வில் பானைகள், ஓடுகள், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகள், கட்டிடச் சுவா்கள், நத்தை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், விலங்கினம் மற்றும் மனித எலும்புக்கூடுகள், தங்கக்காசுகள், உறைகிணறுகள், வளையல்கள், அணிகலன்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்டைய கால தமிழா்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதற்கிடையில், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு செப். 30 ஆம்தேதியுடன் நிறைவு பெறும் என அரசு அறிவித்தது. இதனால், பல மாதங்களாக நடைபெற்று வந்த கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு தற்போது நிறைவடைந்துள்ளது.

பொதுமுடக்கத்தால் பல நாள்கள் அகழாய்வு நடைபெறாத நிலையில் அகழாய்வுக்கான காலம் மேலும் நீட்டிக்கப்படும் என தமிழாா்வலா்களும், தொல்லியல் துறையினரும் எதிா்பாா்த்திருந்த நிலையில் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டவில்லை. தற்போது ஆகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை ஆவணப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்ததும், அகழாய்வுக்காக மேற்கண்ட இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படும் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT