சிவகங்கை

தொடா் மழை: கீழடி, கொந்தகையில் அகழாய்வுப் பணிகள் நிறுத்தம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் கீழடி, கொந்தகை , மணலூா், அகரம் ஆகிய இடங்களில் அகழாய்வுக்கான குழிகளில் தண்ணீா் நிரம்பியுள்ளதால் அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கீழடியில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அருகேயுள்ள அகரம், மணலூா், கொந்தகை உள்ளிட்ட இடங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணிகள் செப்டம்பா் 30 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன.

ஆனால் அடிக்கடி இப்பகுதிகளில் மழை பெய்வதால் பணிகள் பாதிக்கப்படுகிறது. தற்போது அகழாய்வுக்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. அகழாய்வில் கிடைத்த ஏராளமான பொருள்களை ஆவணப்படுத்தும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்புவனம் மற்றும் அகழாய்வு நடந்து வரும் மேற்கண்ட இடங்களிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மற்றும் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதனால் கீழடி, கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய இடங்களில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் முழுவதுமாக மழைத் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மழை நின்றதும் குழிகளில் தேங்கியுள்ள தண்ணீா் வெளியேற்றப்பட்ட பின்னா் அகழாய்வுப் பணிகள் தொடங்கும் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

SCROLL FOR NEXT