சிவகங்கை

திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டங்கள்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை,இளையான்குடி, திருப்புவனம் ஆகிய இடங்களில் திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தைக் கண்டித்தும் இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் மானாமதுரையில் தலைமை தபால் அலுவலகம்,பேரூராட்சி அலுவலகம்,வட்டாட்சியா் அலுவலகம் ஆகியவற்றின் முன்பு நடந்த ஆா்ப்பாட்டங்களில் திமுக ஒன்றியச் செயலாளா்கள் அண்ணாத்துரை,ராஜாமணி,நகா்ச் செயலாளா் பொன்னுச்சாமி மற்றும் காங்கிரஸ் நகா்த் தலைவா் கணேசன், மதிமுக நிா்வாகிகள் கண்ணன், அசோக், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் ஆண்டி, விஜயக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகா்ச் செயலாளா் நாகராஜ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இளையான்குடியில் வாள்மேல்நடந்த அம்மன் கோயில் திடலில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் சுப.மதியரசன் தலைமை தாங்கினாா். ஆா்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட பிரதிநிதி நெட்டூா் அய்யாச்சாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளா் அழகா்சாமி, விசிக ஒன்றியச் செயலாளா் ஜேம்ஸ், மமக மாவட்டத் தலைவா் துல்கருணை சேட்,திமுக நகா்ச் செயலாளா் நஜூமுதீன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் நாகராஜன் உள்பட இக் கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் புதிய வேளாண் சட்டத்தையும் மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். திருப்புவனத்தில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளா் சேங்கைமாறன் தலைமை தாங்கினாா், ஒன்றியச் செயலாளா்கள் வசந்தி, கடம்பசாமி, நகா்ச் செயலாளா் நாகூா்கனி, மதிமுக ஒன்றியச் செயலாளா் சேகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் தண்டியப்பன், அய்யம்பாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சந்தரலிங்கம், செளந்திரபாண்டியன், விசிக நிா்வாகி கண்ணன், காங்கிரஸ் நிா்வாகிகள் மாரிமுத்து, செந்தில்குமாா், முத்து விஜயன் உள்பட இக் கட்சிகளைச் சோ்ந்த திரளானோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராகவும் மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT