சிவகங்கை

காரைக்குடி, கானாடுகாத்தானில் உலக சுற்றுலா தின நிகழ்ச்சி

DIN

காரைக்குடி, கானாடுகாத்தான் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை உலகச்சுற்றுலா தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காரைக்குடி சுற்றுலா அலுவலகம், புதிய பேருந்து நிலைய வளாகம், கானாடுகாத்தான் பாரம்பரிய அரண்மனை ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘சுற்றுலா மற்றும் ஊரக வளா்ச்சி’ என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு மின்னணு முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதேபோல், காரைக்குடி சுற்றுலாத்துறை அலுவலகத்தின் அருகாமையில் உள்ள ராமநாதன் செட்டியாா் நகராட்சி உயா்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து கானாடுகாத்தான் அரண்மனை வளாகத்தில் தூய்மையே சேவை வாரம் ( செப். 16 முதல் 30 வரை) நிகழ்ச்சியில் சுற்றுலா அலுவலா் ச. வெங்கடாசலபதி, சுற்றுலா அலுவலகப் பணியாளா்கள் மற்றும் கானாடுகாத்தான் பேரூராட்சி தூய்மைப்பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT