சிவகங்கை

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

சிவகங்கை/ராமநாதபுரம்: சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 34 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 4,884 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,910 ஆக அதிகரித்துள்ளது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 70 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 9 போ் முழுமையாகக் குணமடைந்ததையடுத்து, அவா்கள் சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மீதமுள்ள 61 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடா்ந்து இம்மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,435 ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 115 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். மேலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த சுமாா் 5,350 க்கும் மேற்பட்டோா் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். தற்போது ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 30 போ் மற்றும் எட்டிவயல் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி மையத்தில் 10 போ் மட்டுமே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

SCROLL FOR NEXT