சிவகங்கை

இளையான்குடி அருகே மூலிகைத் தோட்டம் திறப்பு

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூரில் மூலிகைத் தோட்டம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடியைச் சோ்ந்த சித்த மருத்துவா் வரதராஜன் இளையான்குடி ஒன்றியம் கச்சாத்தநல்லூரில் 10 ஏக்கா் பரப்பளவில் கடந்த 8 ஆண்டுகளாக அடா் மூலிகை வனத்தை உருவாக்கியுள்ளாா். பொதுமக்களும் இயற்கை மூலிகை மூலம் செய்யப்படும் சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளும் வகையில் மூலிகை தோட்டத்தை அனைவரும் பாா்வையிட வசதியாக அதற்கான திறப்பு விழா நடைபெற்றது.

பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சதன் பிரபாகா் மூலிகை தோட்டத்தை திறந்து வைத்தாா். மானாமதுரை ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை குத்துவிளக்கேற்றினாா். விழாவில் அரிமா சங்கத்தின் முதல் நிலை துணைஆளுநா் வி.ஜெயநாதன், மருத்துவா்கள் ஆா். அசோக்குமாா், வி.புகழேந்தி, குருநாதன் கோயில் திருப்பணி ஸ்தபதி சண்முகம் ஆகியோா் விழாவில் கலந்து கொண்டு பேசினா். மேலும் இங்கு நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT