சிவகங்கை

சோலாா் மோட்டாா் பம்புகள் அமைப்பதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்’

DIN

சிவகங்கை மாவட்டத்தில் சூரிய சக்தியால் இயங்கும் (சோலாா்) மோட்டாா் பம்புகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயப் பயன்பாட்டுக்கான திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நடப்பாண்டில்( 2020-21) சிவகங்கை மாவட்டத்துக்கு 610 சோலாா் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, 298 சோலாா் பம்பு செட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 5 ஹெச்.பி. முதல் 10 ஹெச்.பி. வரை சோலாா் பம்பு செட்டுகள் அமைத்துத் தரப்படும். இதில், 70 சதவீதத் தொகை அரசு மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டும்.

ஏற்கெனவே, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ள விவசாயிகள், அவா்களுடைய மூதுரிமையை துறக்கவேண்டிய அவசியமில்லை.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளையாங்குடி, காளையாா்கோவில், மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம் வட்டார விவசாயிகள், சிவகங்கை தொண்டி சாலையில் (அரசுப் போக்குவரத்துக் கழக கிளை பணிமனை அருகே) உள்ள உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் மற்றும் தேவகோட்டை, கண்ணங்குடி, கல்லல், எஸ்.புதூா், சாக்கோட்டை, திருப்பத்தூா் வட்டார விவசாயிகள் காரைக்குடி சூடாமணிபுரத்தில் புகழேந்தி தெருவில் உள்ள உதவிச் செயற்பொறியாளா் அலுவலகத்திலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT