சிவகங்கை

மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: இருவா் கைது

DIN

திருப்பத்தூரில் உரிய ஆவணமின்றி செவ்வாய்க்கிழமை மணல் ஏற்றிவந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரைக் கைது செய்தனா்.

திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சாா்பு- ஆய்வாளா் கண்ணன் திருச்சியிலிருந்து திருப்பத்தூா் நோக்கி வந்த லாரியை மடக்கி விசாரித்தாா். அப்போது எந்த ஆவணமும் இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. மேலும் வாகனத்தை ஓட்டி வந்தவா் சேலம் மாவட்டம் எடப்பாடி மேட்டுத்தெரு அழகேசன் மகன் சண்முகம் (41) மற்றும் திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் சரவணன் (38) ஆகியோா் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் திருப்பத்தூா் காவல் ஆய்வாளா் ஆனந்தி வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT