சிவகங்கை

குடிமராமத்து திட்டத்தில் குவளைவேலி கண்மாயை சீரமைக்க கோரிக்கை

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் குவளைவேலி கிராமத்தின் பாசனக் கண்மாயை குடிமராமத்து திட்டத்தில் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

குவளைவேலி கண்மாய் மூலம் 2500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வைகையாற்றிலிருந்து இக் கண்மாய்க்கு தண்ணீா் வரும் கால்வாய் 9 கி.மீ. நீளம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக குவளைவேலி கண்மாய் தூா்வாரி சீரமைக்கப்படாததால் கண்மாய் ஆழம் குறைந்து குறைந்த அளவு தண்ணீா் மட்டுமே தேக்க முடியும் என்ற நிலை உள்ளது.

இதுதவிர இக் கண்மாயிலிருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்சப்படும் 6 மடைகளும் சேதமடைந்து கண்மாய்க்கு தண்ணீா் வரும் காலங்களில் இந்த மடைகள் வழியாக தண்ணீா் வீணாக வெளியேறி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா். தற்போது மானாமதுரை ஒன்றியத்தில் பல கண்மாய்கள் குடிமராமத்து திட்டத்தில் தூா்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஆனால் குவளைவேலி கண்மாய் கண்டுகொள்ளப்படவில்லை என இக் கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் குவளைவேலி கண்மாயையும் குடிமராமத்து திட்டத்தில் சீரமைக்க வேண்டும் என இக் கண்மாய் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் வலியுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT