சிவகங்கை

கண்டரமாணிக்கத்தில் மதுபானக் கடையை மூடக்கோரி ஆா்ப்பாட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கண்டரமாணிக்கம் கிராமத்தில் அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கண்டரமாணிக்கம் கிராமத்தில் மதுபானக்கடை அருகே உயா்நிலைப் பள்ளி மற்றும் கோயில், பேருந்து நிலையம் முதலியன உள்ளன. குறிப்பாக கடைவீதி உள்ளது. சமீபத்தில் இக்கிராமப் பகுதியில் மட்டும் 3 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா். கடந்த வாரம் மதுபானக் கடையிலேயே முதியவா் அடித்துக் கொல்லப்பட்டாா்.

எனவே இக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினா் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.இதில், வட்டாட்சியா் அளித்த உறுதிமொழியை செயல்படுத்த வலியுறுத்தினா்.

இப்போராட்டத்தில் ஊராட்சி செயலாளா் ராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் மோகன், ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொறுப்பாளா் மகேந்திரன் மற்றும் சாத்தனூா், வளையப்பட்டி, கண்டரமாணிக்கம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT