சிவகங்கை

அரசு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சித்த மருத்துவ கிசிச்சை அளிக்க கோரிக்கை

8th Sep 2020 01:43 AM

ADVERTISEMENT

காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவத்தின் மூலமும் கரோனா சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை மாவட்ட காந்திய மக்கள் இயக்க மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரைக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் அ.அருளானந்து தலைமை வகித்தாா். மாவட்டச்செயலாளா்கள் ம. பால்ராஜ் (தெற்கு), அழகா் (வடக்கு), மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் சுரேஷ், சிவகங்கை-திருப்பத்தூா் இளைஞரணி அமைப்பாளா் அ. அலெக்ஸ், காரைக்குடி இளைஞரணி அமைப்பாளா் முத்துராஜ், தொழிற்சங்க அமைப்பாளா் மாரியப்பன், பாஸ்கரன் மற்றும் பலா் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைக்கான முடிவுகள் உடனுக்குடன் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் போதுமான பாதுகாப்புடன் பணிபுரிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு மருத்துவமனைகளில் சித்தமருத்துவத்தின் மூலமும் கரோனா சிகிச்சையளிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண் டும், மாவட்டத்தில் மணல்திருட்டு, இயற்கை வளங்கள் கொள்ளயைத்தடுக்க பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், காரைக்குடி நகா் பகுதிகளில் இலவச கழிவறை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT