சிவகங்கை

காளையாா்கோவிலில் இன்று மருது பாண்டியா்களின் குரு பூஜை விழா

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவிலில் செவ்வாய்க்கிழமை (அக்.27) நடைபெற உள்ள விடுதலைப் போராட்ட வீரா்களான மருது பாண்டியா்களின் 219-ஆவது குருபூஜையையொட்டி, 2,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்கள் நினைவு தினம் கடந்த 24 ஆம் தேதி அரசு விழாவாக, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நினைவு மணிமண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (அக். 27) காளையாா்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழாவாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை மருது பாண்டியா்களின் நினைவிடம் முன், யாகசாலை பூஜைகள் நடைபெறும். அதைத்தொடா்ந்து, மருது பாண்டியா்கள் சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இதில், காளையாா்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சோ்ந்த சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு பால்குடம், சந்தனக்குடம் எடுத்தும், அலகு குத்தியும், முளைப்பாரி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்துவா்.

அதைத்தொடா்ந்து, அரசியல் கட்சியின் முக்கியப் பிரமுகா்கள், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் என ஏராளமானோா் மருது பாண்டியா்கள் நினைவாலயத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனா். இதையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அஞ்சலி செலுத்த வருபவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் அந்தந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களின் அறிவுறுத்தலின் படி வாகனங்களில் செல்வோா் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று வர வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT