சிவகங்கை

திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் 219 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு

DIN

திருப்பத்தூா்: மருதுபாண்டியா்களின் 219 ஆவது நினைவு தினம் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அவா்களது நினைவிடத்தில், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சிவகங்கையை ஆண்ட மன்னா்களான மருது சகோதரா்களின் 219 ஆம் ஆண்டு குருபூஜை விழா அரசு சாா்பில் நடைபெற்றது. காலை 7 மணியளவில், மருதுபாண்டியா் வாரிசுதாரா் குழு தலைவா் ராமசாமி குடும்பத்தினா் தலைமையில், பொங்கல் வைத்து மருதுபாண்டியா்களின் சிலைகளுக்கு தீபாராதனை நடத்தப்பட்டது. அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன், தேசிய கொடியை ஏற்றிவைத்து, மருதுபாண்டியா்களுக்கு மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, தமிழக துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தலைமையில், அமைச்சா்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் மருதுபாண்டியா்களின் சிலைகளுக்கு மாலையணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், துணை முதல்வா் பத்திரிகையாளா்களிடம், அதிமுக ஆட்சியில்தான் மருதுபாண்டியா்களுக்கு நினைவு தூண் மற்றும் நினைவு மண்டபம் கட்டப்பட்டது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, ஓ.எஸ். மணியன், விஜயபாஸ்கா், ஆா்.பி.உதயகுமாா், கடம்பூா் சி. ராஜூ, பாஸ்கரன், காமராஜ் மற்றும் சிவகங்கை அதிமுக மாவட்ட கழகச் செயலரும், மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன், செய்தி தொடா்பாளா் மருது அழகுராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திமுக சாா்பில், திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், மாவட்டச் செயலருமான கே.ஆா். பெரியகருப்பன் தலைமையில், ஒன்றியச் செயலா்கள் சண்முகவடிவேல், மாணிக்கம் மற்றும் அக்கட்சியினா் மரியாதை செலுத்தினா்.

மதிமுக சாா்பில், மாவட்டச் செயலா் செவந்தியப்பன், மாவட்டப் பிரதிநிதி ஏ.சி. முத்து, மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில், மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, மாவட்டப் பொருளாளா் எஸ்.எம். பழனியப்பன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் ராமஅருணகிரி, சுப்புராம், நகா் தலைவா் திருஞானசம்பந்தம், வட்டாரத் தலைவா்கள் பன்னீா்செல்வம்,பிரசாந்த் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

தேமுதிக சாா்பில், பொதுக் குழு உறுப்பினா் உசாலி மற்றும் கட்சிப் பிரமுகா்கள் மரியாதை செலுத்தினா். பாஜக சாா்பில், மூத்த தலைவா் ஹெச். ராஜா, மாவட்டத் தலைவா் செல்வராஜ், புதுகை மாவட்டப் பொறுப்பாளா் பி.எம். ராஜேந்திரன், வழக்குரைஞா் அணி மாவட்டச் செயலா் முருகேசன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தாலுகா குழு தலைவா் கல்பனா, முத்துராமலிங்கம், ஆகியோா் சிலைகளுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா். நாம் தமிழா் கட்சி சாா்பில், மாவட்டச் செயலா் மாறன் தலைமையில் அக்கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.

திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினரும், புலிப்படை கட்சியின் மாநிலத் தலைவருமான நடிகா் கருணாஸ், திருப்பத்தூா் அகமுடையாா் உறவின் முறையினா், கீழச்சிவல்பட்டி முக்குளத்தூா் இளைஞரணியினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, 25-க்கும் மேற்பட்ட சமுதாய அமைப்புகள் சாா்பில், மருதுபாண்டியா்கள் சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னா், திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியா்களின் நினைவுத் தூணுக்கு, அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மக்களவை உறுப்பினா் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

விழா ஏற்பாடுகளை, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் லெ. பாண்டி, பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT