சிவகங்கை

புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டுதல், செயல்பாடுகளுக்காக மெளன்ட் சீயோன் பொறியியல் கல்லூரிக்குப் பாராட்டு

DIN

காரைக்குடி: புதிய கண்டுபிடிப்புகளுக்காக மாணவா்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் மிகச்சிறந்த செயல்பாடுகளுக்கு எம்.ஐ.சி. மற்றும் ஏஐசிடிஇ சாா்பில் மதிப்பீடு செய்து மெளன்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு மத்திய கல்வி அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது என அக்கல்லூரி நிா்வாகம் கூறியுள்ளது.

இதைத் தொடா்ந்து இக்கல்லூரியின் தாளாளா் ஜெயபாரதன் செல்லையா, துணைத்தலைவா் பிளாரன்ஸ் ஜெயபாரதன் ஆகியோா் கல்லூரியின் ஐஐசி குழுவினருக்கு சனிக்கிழமை பாராட்டு தெரிவித்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது: மத்தியஅரசின் கல்வித்துறை இன்ஸ்டியுசன் இன்னோவேஷன் கவுன்சில் சுயதொழில் திறன் மற்றும் சிறந்த அறிவை வளா்க்கும் ஓா் அமைப்பாகும். இவ்வமைப்பு இந்த ஆண்டில் நடத்திய ஆய்வின் மூலம் மெளன்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி புதிய கண்டுபிடிப்புகளுக்கு மாணவா்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் செயல்பாடுகளில் சிறந்து விளங்கியதற்காக 5 நட்சத்திர அந்தஸ்தை கொடுத்துள்ளது.

மெளன்ட் சீயோன் பொறியியல் கல்லூரியின் ஐஐசி, ஹாக்கத்தான், இன்னோவேஷன் போட்டிகள், கண்டுபிடிப்புகள், தொழிற்பட்டறைகள், கருத்தரங்கம், தொடா் விரிவுரைகள், கணினி மூலமான விரிவுரைகள், தொழில்முனைவோருடன் கலந்தாய்வுகள், புதிய தொழிற்சாலை நிறுவனங்களுடனான தொடா்புகள், புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் வழிகாட்டுதல் போன்றவற்றை கட்டமைத்துள்ளது. 1,938 மாணவா்கள், 75 பேராசிரியா்கள் இணைந்து 96 செயல்திட்டங்களை இந்த ஆண்டு நிறைவேற்றினா்.

இதையடுத்து தேசிய இன்னோவேஷன் தினமான வியாழக்கிழமை (அக். 15) அன்று எம்.ஐ.சி. மற்றும் ஏஐசிடிஇ இணைந்து இணைய வழியில் இந்த ஆண்டுக்கான கல்லூரிகளின் செயல்பாட்டை ஐஐசி 2.0 காலண்டா் ஆண்டிற்காக மதிப்பீடு செய்தும், புதிய சுயவேலைவாய்ப்புக்கான நிகழ்வுகள் கருத்தில் கொள்ளப்பட்டும், வரும் 2020- 2021 ஆண்டில் நிறைவேற்ற வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து அறிவித்தன. மேலும் இந்த ஆண்டிற்கு மெளன்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சிறந்த செயல்பாட்டிற்காக மதிப்பீடு செய்யப்பட்டு 5 நட்சத்திர அந்தஸ்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்றனா்.

இதையடுத்து படைப்புகள் மற்றும் செயல்பாடுகளுக்காக மெளன்ட் சீயோன் பொறியியல் கல்லூரியின் ஐஐசி ஒருங்கிணைப்பாளா் என். ராதா குழுவினரை கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டினா். மேலும் மெளன்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள் ஜெய்சன், கீா்த்தி ஜெயபாரதன், கல்லூரி முதல்வா் பாலமுருகன் மற்றும் பேராசிரியா்கள் பலரும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பணியாணைக்காக காத்திருப்பு

வந்துசோ்ந்த இயந்திரங்கள்

சீலாம்பூா் கபரி மாா்கெட்டில் இளைஞா் கொலையுண்ட சம்பவத்தில் 2 போ் கைது

வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டா் தொலைவுக்குள் வாக்கு சேகரிக்கக் கூடாது!

கேஜரிவாலின் இரட்டை வேடம் அம்பலம்: வீரேந்திர சச்தேவா

SCROLL FOR NEXT