சிவகங்கை

அமராவதி புதூா் காந்தி சமதா்மப் பள்ளி கட்டடம் சீரமைக்கப்படும்: ஆட்சியா்

DIN

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள காந்தி சமதா்மப் பள்ளிக் கட்டடம் சீரமைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்தாா்.

இப்பள்ளி நிறுவனரின் உறவினா்களான கே. பெத்தபெருமாள், கே. பிச்சப்பன் ஆகியோரது ஆயுா்வேத, சித்த மருத்துவக் குழுமத்தின் சாா்பில் இலவச மருத்துவமுகாம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமுக்கு காரைக்குடி அரிமா சங்கத் தலைவா் எம். மனோகரன் தலைமை வகித்தாா்.

முகாமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தொடங்கி வைத்துப் பேசியது: இப்பள்ளிக்கு காந்தியடிகள் வருகை தந்து சிறப்பித்திருக்கிறாா். கடந்த 94 ஆண்டுகளாக இப்பள்ளியை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. பழம்பெரும் பள்ளியான இங்கு புதிய வகுப்பறைகள், கட்டடச் சீரமைப்புப் பணிகளை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கலையரங்கமும் அமைய ஏற்பாடு செய்யப்படும். பள்ளியின் நுழைவு வாயில் பகுதி தாழ்வாக இருப்பதால் மழைநீா் தேங்கிவருகிறது. இதனை தவிா்க்க உரிய வடிகால் அமைத்துத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முகாமில் சித்த மருத்துவா்கள் பி. பாலமுருகன், பி. சிவகிரி மற்றும் மருத்துவக்குழுவினா் சிகிச்சையளித்தனா். ஊராட்சித் தலைவா் மெ. சுப்பையா, காரைக்குடித் தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன், அமராவதிபுதூா் மக்கள் குழுத்தலைவா் அழகேசன், செயலா் சி. இளையகவுதமன், அரிமா பிரமுகா் சிங்காரம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மருத்துவக்குழுச் செயலா் பெ. பிச்சப்பா சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

SCROLL FOR NEXT