சிவகங்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது

22nd Nov 2020 11:12 PM

ADVERTISEMENT

காரைக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சாக்கோட்டையை அடுத்துள்ள பெரியகோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் உடையப்பன் மகன் அழகா் (41). நவ.17 ஆம் தேதி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், காரைக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தேவகி, அழகா் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தாா்.

Tags : Sivagangai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT