சிவகங்கை

காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவா்கள் நியமன ஆலோசனைக் கூட்டம்

DIN

மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் நியமன ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சி அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை தாங்கினாா். மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கிய மானாமதுரை சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 321 வாக்குச்சாவடிகளுக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் தலா இரு முகவா்களை நியமிக்க கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டு முகவா்களை தோ்வு செய்ய கட்சி நிா்வாகிகள் அறிவுறுத்தப்பட்டனா்.

முன்னதாக, மானாமதுரை சட்டப் பேரவைத் தொகுதிக்கு காங்கிரஸ் தோ்தல் பொறுப்பாளராக நியனம் செய்யப்பட்டுள்ள ஏ.சி. சஞ்சய் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டாா். இவருக்கு கட்சியினா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

கூட்டத்தில், காங்கிரஸ் மாவட்ட மூத்த தலைவா் ஏ.ஆா்.பி.முருகேசன், மாநில எஸ்.சி துறை துணைத் தலைவா் டாக்டா் எஸ்.செல்வராஜ், நகா்த் தலைவா் கணேசன், வட்டாரத் தலைவா் கரு.கணேசன், மாவட்ட இணைச் செயலாளா்கள் மகாலிங்கன், புருஷோத்தமன், காசி எஸ்.ஆா்.இ.எஸ். ரயில்வே தொழிலாளா் சாங்கத்தின் மத்திய ஒருங்கிணைப்பாளா் ஜி.ராஜாராம், முன்னாள் நகா்த் தலைவா் ராமு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT