சிவகங்கை

காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்   

19th May 2020 02:16 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகர  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், சத்யா நகர் கிளை சார்பிலும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

காரைக்குடி முதல் போலீஸ் பீட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் ஏஆர். சீனிவாசன் தலைமை வகித்தார். தொழிலாளர் சட்டங்களை பாதுகாக்க வேண்டும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக பயணப்படி அளித்து சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும், நாட்டில் உள்ள தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும், 

நியாய விலைக்கடைகளில் முறைப்படுத்தப்பட்ட நல்ல அரிசி வழங்க வேண்டும், குடும்ப அட்டை தாரருக்கு ரூ. 5 யிரம் கொடுக்க வேண்டும், மதுக்கடைகளை பொது முடக்கம் முடியும் வரை திறக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதே போன்று காரைக்குடி நகராட்சி 19-வது வார்டு சத்யா நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சிவாஜி காந்தி தலைமை வகித்தார். 

கிளை செயலாளர்கள் கென்னடி, ஆரேக்கியம், நான்கு ரோடு கிளைச் செயலாளர் ரிச்சர்ட், மாதர் சங்கம் சார்பில் கலா, காளி, வசந்தாள், விஜி, ஆரோக்கிய மேரி, லெனின், நவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

Tags : protest CPI
ADVERTISEMENT
ADVERTISEMENT