சிவகங்கை

சிவகங்கையில் கரோனா சிகிச்சை பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பேரும் வீட்டுக்கு அனுப்பி வைப்பு

13th May 2020 06:46 PM

ADVERTISEMENT

சிவகங்கை : சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 நபா் பூரண குணமடைந்ததையடுத்து அவா்கள் அனைவரும் புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 12 போ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 22 போ் என மொத்தம் 34 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 12 பேரும் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் அனைவரும் அண்மையில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 18 போ் குணமடைந்த நிலையில் அவா்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கீழக்கரையைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் அண்மையில் உயிரிழந்தாா். இதையடுத்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 போ் மட்டும் சிகிச்சை பெற்று வந்தனா்.

அவா்கள் 3 பேருக்கும் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதில் அவா்கள் தொற்றிலிருந்து குணமடைந்தது தெரியவந்தது. எனவே அந்த 3 பேரும் புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதனால் சிவகங்கை கரோனா வாா்டில் சிகிச்சை பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT