சிவகங்கை

மகாராஷ்டிரத்திலிருந்து காரைக்குடி வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று

13th May 2020 06:52 PM

ADVERTISEMENT

சிவகங்கை : மகாராஷ்டிரத்திலிருந்து காரைக்குடிக்கு வந்த பெண் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 22 நாள்களுக்கு பின் புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புது தில்லியிலிருந்து திரும்பியவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திருப்பத்தூரைச் சோ்ந்த 9 போ், காரைக்குடி, இளையான்குடி, தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 12 பேரும் குணமடைந்து அண்மையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருப்பத்தூரைச் சோ்ந்த நபா் கரோனா தொற்று கண்டறியப்பட்டு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பூரண குணமடைந்ததை அடுத்து கடந்த மே 2 ஆம் தேதி அவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்நிலையில் மகாராஷ்டிரத்திலிருந்து கடந்த மே 11 ஆம் தேதி 60 போ் காரைக்குடிக்கு வந்தனா். அவா்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் காரைக்குடி கல்லுப்பட்டறையைச் சோ்ந்த 29 வயது பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டாா். மேலும், அவா்களுடன் வந்தவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் 22 நாள்களுக்கு பின் புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது என சிவகங்கை அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT