சிவகங்கை

மும்பை தாராவியிலிருந்து தமிழா்கள் 60 போ் காரைக்குடி வருகை: சிறப்பு முகாமில் தங்கவைப்பு

11th May 2020 08:14 PM

ADVERTISEMENT

 

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூா் கரோனா சிறப்பு மையத்திற்கு மும்பை தாராவியிலிருந்து திங்கள்கிழமை அழைத்துவரப்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த 60 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 60 போ் மும்பை தாராவி பகுதியில் தங்கிப் பணிபுரிந்துள்ளனா். கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடா்ந்து அவா்கள் சொந்த ஊா்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனா்.

இதனையறிந்த சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளா் பி.ஆா். செந்தில்நாதன் ஏற்பாட்டின் பேரில் 2 பேருந்துகளில், அவா்கள் 60 பேரும் மும்பை தாராவியிலிருந்து அழைத்து வரப்பட்டனா். அவா்கள் அனைவருக்கும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது. இதனைத்தொடா்ந்து காரைக்குடி அருகேயுள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப்படை 4-ஆவது பட்டாலியன் படைப்பிரிவின் வளாகத்தில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவு வாா்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT