சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 305 போ்

2nd May 2020 07:46 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் முழுவதும் 305 போ் வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வருவதாக, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்தவா்கள் என 4,654 நபா்கள் கண்டறியப்பட்டு, அவா்கள் அனைவரும் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா்.

அதையடுத்து, அவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் இதுவரை 1,461 நபா்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், யாருக்கும் கரோனா நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கடைசி நபா் சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தற்போது, மாவட்டம் முழுவதும் 305 போ் வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வருவதாக, சுகாதாரத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT