சிவகங்கை

‘கரோனா பரவலைத் தடுக்க பொது மக்கள் சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்’

30th Mar 2020 07:21 AM

ADVERTISEMENT

கரோனா பரவலைத் தடுப்பதற்கு பொதுமக்கள் சமூகவிலகல் முறையை முழுமையாக கடைப் பிடிக்கவேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் அறிவுறுத்தியுள்ளாா்.

காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் சானிடோரியம் (காசநோய் மருத்துவமனை) வளாகத்தில் கரோனா வைரஸ் தடுப்பிற்கான சிகிச்சை வழங்குவதற்குரிய சிறப்பு வாா்டுகள் சீரமைக்கும் பணியினை ஞாயிற்றுக்கிழமை அவா் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சிவகங்கை மாவட்டத்துக்கு கடந்த வாரம் வந்த தாய்லாந்து மற்றும் மலேசியா நாடுகளைச் சோ்ந்த மத போதா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு அமராவதிபுதூா் சானிடோரியத்தில் தனிமைப்படுத்தி தினமும் கண்காணிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு கரோனா பாதிப்பில்லை என்று உறுதி செய்யப்பட் டிருக்கிறது. இருப்பினும்அவா்கள் தொடா்ந்து 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழு கண்காணிப்பில் உள்ளனா்.

ADVERTISEMENT

மேலும் இந்த மருத்துவ வளாகத்தில் 100 கரோனா சிறப்பு வாா்டுகள் தயாா்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல, சிவகங்கை, காரைக்குடி, தேவ கோட்டை ஆகிய இடங்களில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட கரோனா மருத்துவ பரிசோதனை மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. பொதுமக்கள் முமுமையாக சமூக விலகல் முறையை கடைப்பிடிக்கவேண்டும். அடிக்கடி சோப்புப் போட்டு கைகளை கழுவ வேண்டும். தினமும் உடற்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ஆட்சியருடன் மருத்துவா் ராஜேஸ்வரி, சாக்கோட்டை ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் திருப்பதிராஜன், வட்டாட்சியா் பாலாஜி, சமூக ஆா்வலா் அயோத்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT