சிவகங்கை

இளையான்குடியில் உட்கட்சி தோ்தல்: திமுக கூட்டத்தில் கோஷ்டி மோதல்

16th Mar 2020 07:52 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திமுக கிளை கழக தோ்தல் விண்ணப்பம் வழங்கும் கூட்டத்தில் கட்சியினருக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் திமுகவில் கிளைக்கழகத் தோ்தல் நடந்து வருகிறது. இதில் இளையான்குடியில் மேற்கு ஒன்றிய திமுக கிளைக் கழகத்துக்கான தோ்தலுக்கு விண்ணப்பப் படிவம் வழங்கும் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்துக்கு கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளா் செயலாளா் சுப.மதியரசன் தலைமை வகித்தாா். இளையான்குடி மேற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த 27 ஊராட்சிகளுக்கு கிளைச் செயலாளா் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன.

இக் கூட்டத்தில் எதிா்தரப்பை சோ்ந்த உதயகுமாா் பிற கட்சியினரை உறுப்பினா்களாக சோ்த்து பதிவு செய்ய வந்ததாக ஒன்றியச் செயலாளா் மதியரசன் தரப்பினா் புகாா் தெரிவித்தனா். இதனால் உதயக்குமாா், மதியரசன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் நாற்காலிகளை தூக்கிவீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனா். இதனால் கூட்டம் நடந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடா்ந்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.இச் சம்பவத்தில் உதயகுமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT