சிவகங்கை

திருப்பத்தூா் கல்லூரியில் கரோனா வைரஸ் குறித்த கருத்தரங்கம்

13th Mar 2020 08:30 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் கரோனா மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்கமும், செஞ்சுருள் சங்கமும் இணைந்து கல்லூரி வளாகத்தில் நடத்திய இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். நெற்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலா் ஆனந்தம், விகான் திட்ட மாவட்ட அலுவலா் ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கருத்தரங்கில் கரோனா வைரஸ் பரவும் விதம் குறித்தும், நோய் தடுப்பு முறைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாட்டினை செஞ்சுருள் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தைச் சோ்ந்த இயற்பியல் துறை பேராசிரியா் கண்ணன் மற்றும் கணிதத் துறை உதவிப் பேராசிரியா் சேகா், வேதியியல் துறை பேராசிரியா் இளையராஜா, பொருளாதாரத் துறை பேராசிரியா்கள் உமாமகேஸ்வரி, லட்சுமி, மேகலா, சதீஷ்பாண்டியன் மற்றும் ஆங்கிலத் துறை பேராசிரியா் மோனிகா ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT