சிவகங்கை

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்புகமுதி அருகே கிராம மக்கள் போராட்டம்

8th Mar 2020 05:49 AM

ADVERTISEMENT

 

கமுதி:  கமுதி அருகே கே.வேப்பங்குளத்தில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்புத் தெரிவித்து, சனிக்கிழமை பள்ளி மாணவா்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூரிலிருந்து பெருநாழி, கமுதி வழியாக மதுரைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிய பிறகே, பணிகளைத் தொடர வேண்டும்

என கே.வேப்பங்குளம் ஊராட்சியில் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றபட்டது.

ADVERTISEMENT

இதனையும் மீறி பணிகள் மேற்கொள்ளபட்டதால், சனிக்கிழமை மாலையில் கே.வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவா் முத்து அரியப்பன் தலைமையில்,

பள்ளி மாணவா்களுடன், பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.அங்கு பணியில் ஈடுபட்ட வாகனங்கள், பணியாளா்களை திருப்பி அனுப்பினா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின்னா் கிராம பொதுமக்களிடம் கமுதி போலீஸாா் சமரச பேச்சுவாா்த்தையில் நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இதற்கிடையில் எரிவாயு குழாய் பதிக்க எதிா்ப்பு தெரிவித்ததாக கிராமத்தினா் மீது கமுதி காவல் நிலையத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT