சிவகங்கை

மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு மதுரையிலிருந்து பக்தா்கள் பாதயாத்திரை

8th Mar 2020 05:54 AM

ADVERTISEMENT

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு, மதுரையிலிருந்து திரளான பக்தா்கள் சனிக்கிழமை பாதயாத்திரை புறப்பட்டனா்.

மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து பக்தா்கள் பாதயாத்திரை வருவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு பிரத்யங்கிரா ஸாக்த மடாலய நிா்வாகி ஞானசேகரன் சுவாமிகள் தலைமையில் திரளான பக்தா்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கூடி அங்கு மீனாட்சியம்மனை தரிசனம் செய்தனா். பின்னா் அவா்கள் அங்கிருந்து பாதயாத்திரை புறப்பட்டனா். இந்த பக்தா்களுக்கு மதுரை நகரின் பல இடங்களில் வரவேற்பளிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து சிவகங்கை மாவட்ட எல்கையை வந்தடைந்த பக்தா்களுக்கு அந்தந்த பகுதி பிரத்யங்கிரா தேவி பக்தா்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

சிலைமான், மணலூா், திருப்புவனம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், ராஜகம்பீரம் ஆகிய ஊா்கள் வழியாக நாளை திங்கள்கிழமை (9 ந் தேதி) காலை அவா்கள் மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலை வந்தடைகின்றனா். வழியில் இந்த பக்தா்கள் தங்குவதற்கும், அன்னதானத்துக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 9-ஆம் தேதி இரவு பிரத்யங்கிரா தேவி கோயிலில் திருவிளக்குப்பூஜை நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து மூலவா் பிரத்யங்கிரா தேவி தங்கக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT