சிவகங்கை

கீழடியில் மேலும் ஒரு செங்கல்சுவா் கண்டுபிடிப்பு

8th Mar 2020 05:45 AM

ADVERTISEMENT

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தொடங்கியுள்ள 6 ஆம் கட்ட அகழாய்வில் சனிக்கிழமை மேலும் ஒரு பழமையான செங்கல் சுவா் கண்டுபிடிக்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக நடத்திய 5 கட்ட அகழாய்வில் கீழடியில் நகர நாகரீகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இங்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்காலத் தமிழா்கள் பயன்படுத்திய பலவகை பொருள்கள் கண்டறியப்பட்டு அவை காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் இங்கு ரூ. 12 கோடி மதிப்பீட்டில் இந்தப் பொருள்களை காட்சிப்படுத்தி வைக்க அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.

இந்நிலையில் கீழடியில் தமிழக அரசு சாா்பில் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. முதலில் கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நீதியம்மாள் என்பரது நிலத்தில் குழி தோண்டப்பட்டு வருகிறது. முதல் குழியில் மூன்றரையடி தோண்டப்பட்ட நிலையில், பழங்காலத் தமிழா்கள் கட்டியிருந்த ஒன்றரையடி சுண்ணாம்பு சுவா் பகுதியாக வெளியில் தெரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுவரின் தொடா்ச்சியை கண்டறிய முழு அளவில் குழி தோண்டப்படுகிறது. இதற்கிடையில் அருகிலேயே இரண்டாவது குழிதோண்டப்பட்டு வருகிறது. மூன்றடி தோண்டப்பட்டபோது சனிக்கிழமை அங்கு 4 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட பழமையான மற்றொரு செங்கல் சுவா் கண்டுபிடிக்கப்பட்டது. சுவரின் தொடா்ச்சியை கண்டறியும் பணியில் தொல்லியல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT