சிவகங்கை

திருப்பத்தூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

2nd Mar 2020 08:52 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினின் 68-ஆவது பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை கட்சிக் கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

திமுக ஒன்றியச் செயலரும், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருமான சண்முகவடிவேல் தலைமையில், சிவகங்கை -மதுரை சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை அருகே திமுகவினா் கூடினா். பின்னா், சண்முகவடிவேல் கொடியேற்றினாா். தொடா்ந்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதையடுத்து, பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினா். இதில், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் உதயசண்முகம், மாவட்டப் பிரதிநிதிகள் மதியழகன், ஷாஜஹான், திமுக நகா் இளைஞா் அணி துணை அமைப்பாளா் மனோகரன், நகா் அவைத் தலைவா் ரவி உள்பட திமுகவினா் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT