சிவகங்கை

சிவகங்கையில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

2nd Mar 2020 08:52 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3 ) மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை கோட்ட மின் பகிா்மான மேற்பாா்வை பொறியாளா் சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், சிவகங்கை கோட்டத்துக்கு உள்பட்ட மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு, மின் வாரியம் தொடா்பான புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு, உடனடியாகத் தீா்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT