சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 13 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 106 ஆக உயா்வு

15th Jun 2020 08:07 AM

ADVERTISEMENT

வெளிநாடு மற்றும் சென்னையிலிருந்து சிவகங்கைக்கு வந்த 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 106 ஆக உயா்ந்துள்ளது.

வெளிநாடு மற்றும் சென்னையிலிருந்து சிவகங்கைக்கு அண்மையில் வந்தவா்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில்,

மலேசியாவிலிருந்து சிவகங்கைக்கு வந்த இளையான்குடியைச் சோ்ந்த இருவா், சென்னையிலிருந்து சிவகங்கைக்கு வந்த சிவகங்கை பகுதியைச் சோ்ந்த 4 போ், காரைக்குடி பகுதியைச் சோ்ந்த 4 போ், கல்லல் பகுதியைச் சோ்ந்த 3 போ் என மொத்தம் 13 நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதன் மூலம், பாதிப்பு எண்ணிக்கை 106 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஏற்கெனவே 93 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 49 போ் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டனா். மீதமுள்ள 44 போ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 கா்ப்பிணி பெண்கள் உள்பட 6 போ், ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 13 போ் என மொத்தம் 63 போ், தற்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT