சிவகங்கை

கரோனா கிகிச்சையில் சித்த மருத்துவத்தை பயன்படுத்தக்கோரி தமிழக மக்கள் மன்றத்தினர் உண்ணாவிரதம்  

14th Jun 2020 01:35 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை தமிழக மக்கள் மன்றம் காலை முதல் இரவு வரை தமிழக அரசுக்கு சித்த மருத்துவத்தை தமிழகம் முழுவதும் பயன்படுத்தக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து தமிழக மக்கள் மன்றத்தின் தலைவர் சா.மீ. ராசகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் உயிர் பலியாகியுள்ளனர். 

உலகில் ஸ்பானிஸ் புளு போன்ற தொற்று ஏற்பட்ட காலத்தில் தமிழ் நாட்டின் சித்த மருத்துவம் மருந்தாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் சித்த மருத்துவம் மூலம் கரோனா குணப்படுத் தப்பட்டுள்ளன. இதனை அறிந்த தமிழக அரசு சென்னை சாலிக் கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மட்டும் சித்த மருத்துவர் வீரபாபு தலைமையில் 200 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ நிலையத்தினை ஏற்பாடு செய்துள்ளனர். 

எனவே தமிழகம் முழுவதிலும் கரோனா வைரஸ் தொற்று சிகிச்சையளிக்கப்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளிலும் உடனடியாக சித்த மருத்துவம் பார்க்க அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக மக்கள் மன்றம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகிறோம் என்றார்.

Tags : fasting Sivagangai coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT