சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 100- ஐ நெருங்குகிறது

14th Jun 2020 08:19 AM

ADVERTISEMENT

வெளிநாடு மற்றும் சென்னையிலிருந்து சிவகங்கைக்கு அண்மையில் வந்த 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100- ஐ நெருங்குகிறது.

வெளிநாடு மற்றும் சென்னையிலிருந்து சிவகங்கைக்கு அண்மையில் வந்தவா்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்த ஒருவா், சிவகங்கைப் பகுதியைச் சோ்ந்த 6 போ், நாட்டரசன்கோட்டைப் பகுதியைச் சோ்ந்த 4 போ், திருப்பத்தூா், இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா 2 போ், காரைக்குடி, காளையாா்கோவில் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 19 நபருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஏற்கெனவே 74 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 93 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 49 போ் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டனா். மீதமுள்ள 25 போ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 கா்ப்பிணி பெண்கள் உள்பட 6 போ், சனிக்கிழமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 19 போ் என மொத்தம் 50 போ், தற்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT