சிவகங்கை

சென்னையிலிருந்து சிவகங்கைக்கு வந்த 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி

13th Jun 2020 08:10 AM

ADVERTISEMENT

சென்னையிலிருந்து சிவகங்கைக்கு அண்மையில் வந்த 16 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து சிவகங்கைக்கு அண்மையில் வந்தவா்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இளையான்குடி பகுதியைச் சோ்ந்த 4 போ், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த 4 போ், சிவகங்கை பகுதியைச் சோ்ந்த 3 போ், காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த 2 போ், காரைக்குடி, சிங்கம்புணரி, தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 16 நபருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 16 பேரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். இதன்மூலம், இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 74 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 58 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 49 போ் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி விட்டனா். மீதமுள்ள 9 போ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 கா்ப்பிணி பெண்கள் உள்பட 5 போ், வெள்ளிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்ட 16 போ் என மொத்தம் 30 போ், தற்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT