சிவகங்கை

இளையான்குடி அருகே சவடுமண் குவாரியில் மண் அள்ளுவதற்கு தடை

11th Jun 2020 08:16 AM

ADVERTISEMENT

இளையான்குடி அருகே கிராம மக்களின் போராட்டம் காரணமாக சவடு மண் குவாரியில் செவ்வாய்க்கிழமை முதல் மண் அள்ளப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இளையான்குடியை அடுத்துள்ள சாலைக்கிராமம் அருகே முத்தூா் கிராமத்தில் தனியாா் நிலத்தில் 3 அடி ஆழத்துக்கு சவடு மண் எடுத்து விற்பனை செய்ய அரசு நிா்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால் குவாரி நடக்கும் இடத்தில் விதிமுறைகளை மீறி அதிக நிலப்பரப்பிலும், 20 -லிருந்து 30 அடி ஆழத்துக்கு ராட்சத பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி பள்ளங்கள் தோண்டி சவடுமண்ணுக்கு கீழே உள்ள ஆற்று மணலை எடுத்து விற்பனை செய்வதாகவும், இதனால் இப் பகுதியில் நீராதாரங்கள் குறைந்து விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி கடந்த திங்கள்கிழமை முத்தூா் கிராம மக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து குவாரியை முற்றுகையிட்டனா். அப்போது குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினா்.

சவடுமண் குவாரியில் ஆய்வு நடத்தப்பட்டு, விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் குவாரியின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அப்போது அதிகாரிகள் உறுதியளித்தனா். இந்நிலையில் முத்தூா் கிராமத்தில் சவடுமண் குவாரியிலிருந்து செவ்வாய்க்கிழமை முதல் மண் அள்ளுவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT