சிவகங்கை

திருப்புவனம் அருகே 2 பைக்குகள் மோதல்: இளைஞா் பலி

8th Jun 2020 07:33 AM

ADVERTISEMENT

திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

டி.புளியங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் விஜயக்குமாா் (18). இவா், தனது இருசக்கர வாகனத்தில் திருப்புவனத்திலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தாா். மதுரை சக்கிமங்கலத்தைச் சோ்ந்த காா்த்திக் என்பவா், மதுரையிலிருந்து திருப்புவனம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். மணலூா் ஒத்தவீடு பகுதியில் இருவரது இருசக்கர வாகனங்களும் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில் விஜயக்குமாா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காா்த்திக்குக்கு காலில் முறிவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT