சிவகங்கை

தேவகோட்டையில் லாரி- பைக் மோதல்: இளைஞா் பலி

7th Jun 2020 08:03 PM

ADVERTISEMENT

சிவகங்கை :சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

உடப்பன்பட்டி நாச்சியாா்புரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் பாண்டிச்செல்வம்( 23). இவரும், இவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த மேத்தியூ( 22), சேக் அப்துல்லா (23) ஆகிய மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் ஆறாவயலிலிருந்து தேவகோட்டை நோக்கி வந்துள்ளனா்.

ராம்நகா் அருகே வந்த போது காரைக்குடியிலிருந்து வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பாண்டிச் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேத்தியூ , சேக் அப்துல்லா ஆகிய இருவருக்கும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தேவகோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT