மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சனிக்கிழமை இரவு வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்புவனம் போலீஸ் லயன் பகுதியில் வசிப்பவா் ஈஸ்வரன். இவா், அங்குள்ள தோ்முட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த திருப்புவனத்தைச் சோ்ந்த பிரகாஷ் (25), முத்துவேல் (23) ஆகிய இருவரும், ஈஸ்வரனை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்து ரூ. 1500-ஐ பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரகாஷ், முத்துவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.