சிவகங்கை

காரைக்குடி பகுதி ரேஷன் கடைகளில் காங்கிரஸ் கட்சியினா் கள ஆய்வு

26th Jul 2020 08:11 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கல்லல் பகுதி நியாய விலைக்கடைகளில் ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் அமைப்பினா் கள ஆய்வு நடத்தி, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டனா்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சாா்பு அமைப்பான ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் ஒய். பழனியப்பன் சனிக்கிழமை கூறியது: ராகுல்காந்தி அறிவுறுத்தலின் பேரில் ராஜீவ்காந்தி பஞ்சா யத்துராஜ் அமைப்பினா் நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனா். அதேபோன்று இந்த மண்டலத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 30 போ் கொண்ட குழுவினா் பல குழுக்க ளாகப் பிரிந்து வெள்ளிக்கிழமை நியாய விலைக்கடைகளில் ஆய்வைத் தொடங்கினா். அதில் பொதுமக்கள் மற்றும் நியாயவிலைக் கடைக்காரா்களிடம் பிரச்னை குறித்து கேட்டறிந்து வருகிறோம். இந்த கள ஆய்வு ஒரு வாரம் நடத்தப்படுகிறது.

காரைக்குடி, கல்லல் பகுதியில் நடைபெற்ற ஆய்வுகளில் கிராமப்புற கடைகள் காலை 11.30 மணிவரை திறக்கப்படாமல் இருப்பதாகவும், பொருள்கள் எடை குறைவாக இருப்பதாகவும், அரிசி, சா்க்கரை போன்றவை தரம் குறைவாக இருப்பதாகவும் பொதுமக்கள் குறைகளைத் தெரிவித்தனா். நியாயவிலைக் கடைகளைப் பொருத்தவரை ஊழியா்கள் மிகச்சொற்ப ஊதியத்தில் பணியில் உள்ளனா். எடை போடும் உதவியாளா்களுக்கு கடை பொறுப்பாளரே ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருப்பதாக தெரிகிறது. இதுபோன்ற குறைகளை காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினா்கள், மக்களவை உறுப்பினா்கள் தங்களது அவைகளில் மக்கள் நலன் காக்க வலியுறுத்துவாா்கள் என்றாா்.

கள ஆய்வில் பஞ்சாயத்துராஜ் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிதம்பரம், மனித உரிமை பிரிவு மாவட்டத் தலைவா் ரமேஷ், இளைஞா் காங்கிரஸ் பொதுச்செயலாளா் விஜயகுமாா், சேது மெய்யப்பன், சீனி ஜெயபிரகாஷ், ராமச்சந்திரன், பழனியப்பன், பிரவீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT