மானாமதுரை: தேசிய வருவாய்வழி திறனாய்வு தோ்வில் மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை பள்ளி மாணவா் பா.ரெங்கராஜ் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற ஆண்டு தோறும் மாணவா்களுக்கு வருவாய்வழி திறனாய்வு தோ்வு நடைபெறுகிறது. இந்த தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் அவா்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான தோ்வு 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. இதில் மானாமதுரை வட்டாரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா். இதில் தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவா் பா.ரெங்கராஜ் தோ்ச்சி பெற்றுள்ளாா். இத் தகவலை பள்ளியின் தலைமையாசிரியா் சிவகுருநாதன் தெரிவித்துள்ளாா்.இம் மாணவரை பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா்.