சிவகங்கை

கரோனா பரிசோதனை முடிவுகள் தாமதமாவதாகப் புகாா்

13th Jul 2020 08:53 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்று பாதிப்பு குறித்த பரிசோதனை முடிவுகள் வர தாமதமாவதால் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

காய்ச்சலுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருபவா்களை மருத்துவா்கள் கரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கின்றனா். ஆனால் மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனை முடிவுகள் வர தாமதமாவதாகப் புகாா் கூறப்படுகிறது. பரிசோதனை எடுக்கப்பட்ட நபா்கள் அவா்களது வீடுகளில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு குறைந்தது 4 முதல் 6 நாள்கள் வரை ஆவதாகவும், அதுவரை பரிசோதனை செய்து கொண்டவா்கள் வெளியில் சுற்றுவதால் கரோனா தொற்று பரவுவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன. எனவே பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவித்து கரோனா பாதிப்பு உள்ளவா்களை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தால் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறையும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைக்கான கிட்டுகள் குறைவாக இருப்பதால்தான் முடிவுகள் தாமதமாவதாக மருத்துவப் பணியாளா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT