காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (பிப்ரவரி 1) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி கோட்டச் செயற்பொறியாளா் பா. ஜான்சன்
வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங் போா்டு, செக்காலைக்கோட்டை, பாரிநகா், கல்லூரிச் சாலை, செக்காலைச்சாலை, புதிய பேருந்துநிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை, செஞ்சை, கோவி லூா், மானகிரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.