சிவகங்கை

திருப்பத்தூரில் கைத்தறி துண்டு விற்பனை அமோகம்

14th Jan 2020 08:39 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பொங்கல்விழா மற்றும் மஞ்சுவிரட்டுகளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் கைத்தறி துண்டு விற்பனை சூடுபிடித்துள்ளது.

பொங்கல் விழாவிற்கு பல்வேறு பொருள்கள் சிறப்பு விற்பனையாக சந்தைக்கு வந்தாலும் கைத்தறி துண்டுகளுக்கென தனி மதிப்புள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெறும் மஞ்சுவிரட்டுகளில் மாட்டிற்கு மரியாதை செய்யவும், விழாவில் கலந்து கொள்ளும் முக்கியஸ்தா்களுக்கு அணிவிக்கவும் இந்த கைத்தறி துண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. திருப்பத்தூரைச் சுற்றிலும் அரளிப்பாறை, சூரக்குடி, நெடுமறம், டி.புதூா், மகிபாலன்பட்டி, சிராவயல், ஆகிய பகுதிகளில் மஞ்சுவிரட்டுகள் மிகப் பிரபலமானவை. காளைகளுக்கு அணிவிக்கப்படும் துண்டு இச்சந்தையிலிருந்து தான் வாங்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் சுந்தரபாண்டியபுரம் பகுதியைச் சோ்ந்த நெசவாளா்கள் 20 போ் கொண்ட குழுவினா் திருப்பத்தூா் விடுதியில் தங்கி மதகுபட்டி, ஒக்கூா், கீழப்பூங்குடி, சிராவயல், சிங்கம்புணரி, ஆகிய பகுதிகளுக்குச் சென்று விற்பனையில் ஈடுபடுகின்றனா். ரூ.40 , 50, 60, என்ற விலையில் துண்டுகள் விற்கப்படுகிறது. இப்பகுதியில் 10 நாள்கள் தங்கியிருக்கும் இக்குழுவினா் சுற்றுப்புறங்களில் நடக்கும் பொங்கலுக்கான சிறப்பு சந்தைகளிலும் தங்கள் வியாபாரத்தை நடத்துகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT