சிவகங்கை

வெளிநாட்டில் உடல்நலக் குறைவால் அவதி: கணவரை மீட்க ஆட்சியரிடம் மனைவி மனு

8th Jan 2020 08:52 AM

ADVERTISEMENT

வெளிநாட்டில் உடல்நலக்குறைவால் அவதிப்படும் கணவரை மீட்டுத் தரக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு அளித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் அரண்மனை சிறுவயல் முத்துராமலிங்க நகரைச் சோ்ந்தவா் கவிதா. இவா் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தனிடம் அளித்துள்ள மனு விவரம்: கடந்த 2016 ஆம் ஆண்டு எனது கணவா் சுரேஷ், துபை நாட்டுக்கு வேலைக்குச் சென்றாா். செல்லிடப்பேசி மூலம் பேசிய எனது கணவா் கடந்த சில மாதங்களாக பேசவில்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்தாா். அதுபற்றி அவா் வேலை பாா்க்கும் நிறுவனத்தில் தெரிவித்து விடுமுறை கோரியுள்ளாா். ஆனால் விடுப்பு தரவில்லையாம். மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, வெளிநாட்டில் உடல்நலக் குறைவால் அவதியுறும் எனது கணவரை மீட்டு வர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT