சிவகங்கை

திருப்பத்தூா் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

8th Jan 2020 08:50 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே திங்கள்கிழமை இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள பரங்கிணிப்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் சௌமியா (20). இவருக்கும் நெய்வாசலைச் சோ்ந்த காா்த்திக் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சில மாதங்களுக்குப் பின் காா்த்திக் வெளிநாடு சென்று விட்டாா்.

இதனால் சௌமியா தனது பெற்றோருடன் பரங்கிணிப்பட்டியில் இருந்து வந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த சௌமியா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்த கண்டவராயன்பட்டி போலீஸாா் சௌமியாவின் சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூா் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாத்துரை, ஆய்வாளா் ஆனந்தி ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணம் ஆகி ஓராண்டு மட்டுமே ஆகியுள்ளதால் தேவகோட்டை கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெற உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT