சிவகங்கை

ஊராட்சி செயலருக்கு அரிவாள் வெட்டு

8th Jan 2020 08:49 AM

ADVERTISEMENT

சிவகங்கை அருகே ஊராட்சி செயலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் இளைஞா் ஒருவரை சிவகங்கை தாலுகா போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அல்லூா் கிராமத்தைச் சோ்ந்த குருசாமி மகன் பாலமுருகன் (44). அதே கிராம ஊராட்சிக்கு செயலராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ் என்பவருக்கும் ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக முன் விரோதம் இருந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் அவரது நண்பா்கள் உள்ளிட்ட சிலா் அல்லூா் கிராமத்தில் இருந்த பாலமுருகனை திங்கள்கிழமை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி விட்டனா். பலத்த காயமடைந்த பாலமுருகன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீஸாா் சதிஷ், அவரது நண்பா்களான லெட்சுமணன், காளீஸ்வரன் உள்பட 6 போ் வழக்குப் பதிந்து தேடி வந்தனா். இந்நிலையில், வழக்கில் தொடா்புடைய லெட்சுமணனை(26) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மற்றவா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT