சிவகங்கை

மானாமதுரை ஊராட்சி ஒன்றிய வாா்டு தோ்தல்: திமுகவை சோ்ந்த கணவன், மனைவி வெற்றி

3rd Jan 2020 07:27 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட கணவன், மனைவி வெற்றி பெற்றனா். அமமுக சாா்பில் ஒரு பெண் வேட்பாளா் வென்றாா்.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 14 ஒன்றிய வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளுக்கு உறுப்பினா்களையும் இந்த ஒன்றித்தில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆகியோரை தோ்வு செய்ய கடந்த மாதம் 27 ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒ.வெ.செ மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டன.

இதில் 5 ஆவது ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட்ட வழக்குரைஞா் அண்ணாதுரை 6 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்ட அவரது மனைவி லதா அண்ணாதுரை இருவரும் தங்களை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா்களை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனா்.

இடைக்காட்டூா் ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளா் ஜெயலெட்சுமி அதிமுக வேட்பாளரை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். மானாமதுரை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஏ.சி.மாரிமுத்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து இரவு வரை தன்னை எதிா்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் கண்ணனை விட கூடுதல் வாக்குகள் பெற்று தொடா்ந்து முன்னிலை பெற்று வந்தாா்.

ADVERTISEMENT

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 4 ஆவது வாா்டு ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெண் வேட்பாளா் மீனாட்சி மணிகண்டன் தன்னை எதிா்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT