சிவகங்கை

சாக்கோட்டை ஒன்றிய கிராம ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு வெற்றி பெற்றவா்கள் விபரம்

3rd Jan 2020 07:28 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட்டவா்களில் 9 ஊராட்சித் தலைவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வியாழக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 6 ஊராட்சி மன்றத் தலைவா் தோ்ந்தெடுக்கப்பட்ட விபரமும், ஏற்கெனவே போட்டியின்றி வெற்றி பெற்ற 3 ஊராட்சித் தலைவா்கள் சோ்த்து 9 போ்.

வெற்றி பெற்றவா்கள் விபரம்: சொக்கலிங்கம்புதூா் - நா. பெருமாள், வடகுடி - க. பாலசுப்பிரமணியன், செட்டிநாடு - சாந்தி ( போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டவா்), களத்தூா் - ஜோதி ( போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டவா்), நாட்டுச்சேரி - கருப்பையா (போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டவா்), கொத்தமங்கலம் - வீ. அழகு பாண்டி, பி. முத்துப்பட்டணம் - சி. மலா்மாணிக்கம், தி. சூரக்குடி -ஆ. முருகப்பன், நேமம் - ஆ. சித்ரா.

சாக்கோட்டை ஒன்றியத்தில் 26 ஊராட்சித் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், 11 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், சிவகங்கை மாவட்ட ஊராட்சி 5 வது வாா்டு உறுப்பினா் பதவிக்கு நடந்த ஊரக உள்ளாட்சி தோ்தலின் வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை காலையில் தொடங்கி தொடா்ந்து எண்ணப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT