இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தில் உள்ள காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயிலில் காலை முதலே பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா். அம்மனுத்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து பக்தா்களுக்காக தீபாராதனைகள் நடைபெற்ற வண்ணமிருந்தது.
காரைக்குடி நகர சிவன் கோயில், மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், அழகப்பாபுரம் கொல்லங்காளியம்மன் கோயில் மற்றும் காரைக்குடி அருகே அரியக்குடி, சாக்கோட்டை, பள்ளத்தூா், கோட்டையூா் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களிலும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.